தமிழகம் முழுவதும் 36 டி.எஸ்.பி.க்கள், உதவி கமி‌ஷனர்கள் இடமாற்றம் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு!

367 0

தமிழகம் முழுவதும் 36 டி.எஸ்.பி.க்கள் மற்றும் உதவி கமி‌ஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 36 டி.எஸ்.பி.க்கள் மற்றும் உதவி கமி‌ஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி பிறப்பித்துள்ளார்.
டி.ஜி.பி. உத்தரவு
இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. எஸ்.ராமகிருஷ்ணன் சிவகங்கை குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த பாண்டிச்செல்வம் தேனி குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த கே.பாபு சேலம் ரெயில்வே டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த எஸ்.பாலகிருஷ்ணன் வாணியம்பாடி டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த முரளி கிருஷ்ணகிரி மதுவிலக்கு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை ரெயில்வே டி.எஸ்.பி. வெற்றிவேந்தன் திருப்பூர் வடக்கு உதவி கமி‌ஷனராகவும், திருச்சி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. முருகவேல் பல்லடம் டி.எஸ்.பி.யாகவும், திண்டுக்கல் போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.ஆனந்த் சிவகங்கை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த மனோகரன் அரக்கோணம் டி.எஸ்.பி.யாகவும் பதவி வகிப்பார்கள்.
தேனி, மதுரை, சேலம்
தேனி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. சூரகுமரன் மதுரை டவுன் சட்டம்–ஒழுங்கு உதவி கமி‌ஷனராகவும், அப்பதவியில் இருந்த உதயகுமார் மதுரை குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த தங்கவேலு கோபிச்செட்டிப்பாளையம் டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த கிருஷ்ணசாமி தேனி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.யாகவும், தர்மபுரி குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரியாஜூன் சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த புருசோத்தமன் மதுரை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த தர்மலிங்கம் நெல்லை வணிக குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த இளங்கோவன் மதுரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாகவும், ஈரோடு சிறப்பு அதிரடி படை டி.எஸ்.பி. ராஜூ, ஈரோடு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் எஸ்.சி./எஸ்.டி. விஜிலன்ஸ் பிரிவு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த சீனிவாசன் பாலகோடு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த கார்த்திகேயன் கோவை சட்டம்–ஒழுங்கு உதவி கமி‌ஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஐகோர்ட்டு கிளை பாதுகாப்பு
கடலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. மாரியப்பன் சென்னை ஆவின் விஜிலன்ஸ் டி.எஸ்.பி.யாகவும், வேலூர் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு டி.எஸ்.பி. எம்.ராதாகிருஷ்ணன் சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த சங்கரசுப்பிரமணியன் லஞ்ச–ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாகவும், திருவண்ணாமலை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. துரைபாண்டியன் காட்பாடி டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த சங்கர் திருவண்ணாமலை சமூக நிதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.யாகவும், சேலம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் மோகன் திருப்பூர் நுண்ணறிவு பிரிவு உதவி கமி‌ஷனராகவும், கோவை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ஆறுமுகம் நெல்லை குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த மல்லிகா மதுரை ஐகோர்ட்டு கிளை பாதுகாப்பு உதவி கமி‌ஷனராகவும், விழுப்புரம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. கருணாநிதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த சுரேஷ் வேலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாகவும், வேலூர் சிறப்பு புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. தனபாலன் சென்னை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமி‌ஷனராகவும், சேலம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமி‌ஷனர் ஜனார்த்தனன் திருப்பூர் குற்ற ஆவண காப்பக உதவி கமி‌ஷனராகவும், ஆலங்குளம் டி.எஸ்.பி. எம்.சுபாஷினி அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.யாகவும், அப்பதவியில் இருந்த ஜாகீர் உசேன் ஆலங்குளம் டி.எஸ்.பி.யாகவும், அரியலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. பாபு சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.யாகவும் பதவி ஏற்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.