முதல்வர் வெளிநாடு பயணத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக முக ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் – ஜெயக்குமார்

570 0

காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
தாங்க முடியாத விரக்தியிலும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார்.
முதலமைச்சரின் சாதனைகள் தொடர்வதைக் கண்டு மு.க.ஸ்டாலினின் மனம் புழுங்குகிறது. மற்ற மாநிலங்களில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் செயல்படுத்தப்பட்ட புதிய தொழில் திட்டங்களை காட்டிலும், தமிழகத்தில் பல மடங்கு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.