எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் கொள்முதல் தொடர்பான முன்பணத்தை ரஷியாவிடம் செலுத்தியது இந்தியா!

361 0

எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் கொள்முதல் தொடர்பான முன்பணத்தை இந்தியா அளித்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்ற எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் புதினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
இந்திய மதிப்பில் சுமார் 40 ஆயிரம் கோடி ருபாய் மதிப்புக்கு போடப்பட்ட இந்த ஒப்பந்ததில் முன் பணம் மற்றும் பணம் செலுத்தும் நடைமுறையில் இரு நாடுகளிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு விற்பனை செய்யவிருக்கும் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் தொடர்பான முன் பணம் முழுவதும் பெறப்பட்டு விட்டது. மேலும் திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் ஒப்பந்த காலத்துக்குள் வழங்கப்படும். இது தொடர்பான பிற விவரங்களை வெளியிட முடியாது என ரஷிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுதம்
ரஷியா மற்றும் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுத்தின் முதல் தொகுப்பு அடுத்த ஆண்டு இந்தியாவிடம் வழங்கப்பட உள்ளது. மேலும், அதன் அனைத்து தொகுப்புகளும் 2023-ம் ஆண்டு முழுமையடையும் என்பது குறிப்பிடத்தக்கது.