சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட 40 தி.மு.க. எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு எம்.பி.க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. அதை முறையாக தொகுதிகளுக்கு செலவு செய்வது குறித்து கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மக்களை நேரடியாக சந்தித்தும் மனுக்களை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் நிலவரம் தொடர்பாகவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

