பேராயரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கோட்டா வாக்குறுதி

329 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க மதகுருமார்கள் விடுத்துள்ள வேண்டுகோளை தமது அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்ததும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் அற்ற நாட்டுக்குள் மக்கள் சுந்திரமாக வாழும் நிலைறை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆயர்களின் அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (25) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, கோட்டாபய ராஜபக்ஷ, பயங்கரவாத தாக்குதலால் கத்தோலிக்க மதகுருமார்களின் வேதனையை தன்னால் புரிந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.