ஐ.தே.க பிரதேச சபையின் உறுப்பினர், அவரது சகோதரிகளுக்கு விளக்கமறியல்!

265 0

வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பிரனாந்து, அவரது சகோதரிகள் இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில நீதிவான் உத்தரவிட்டுள்ள. அதேவேளை அவர்களின் தந்தைக்கு  3 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்ததாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினரும் அவரது சகோதரியும் இன்று புதன்கிழமை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது பிடியாணை பிரப்பிக்கப்பட்டிருந்த பிரதேச சபை உறுப்பினரின் மற்றைய சகோதரி வர்ணகுலசூரிய சுபுனி துலாஞ்சனி பிரனாந்து மற்றும் அவரது தந்தையான சமன் அஷோக் குமார் பிரனாந்து ஆகியோரும் மன்றில் ஆஜராகியுள்ளனர். இந்நிலையில் நீதவான் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரியை விளக்கமறியலில் வைக்குமாறும், அவரின் தந்தையை  பிணையில் செல்லவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீனோர் சந்தியில் கடந்த திங்கட்கிழமை மாலை 5.15 மணியளவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை போக்குவரத்து பொலிசார் நிறுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த யுவதியிடம் விசாரணைகளை மேற்கொண்ட  பொலிஸார்,  அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரமோ வேறு எந்தவிதமான ஆவனமோ இருக்கவில்லை. பின்னர் பொலிஸார் குறித்த யுவதியை தடுத்து வைத்துள்ளனர்.

இதணை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குறித்த யுவதியின் சகோதரியான பிரதேச சபை உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோ இருவரும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்துள்ளதுடன் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதியை அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இந்த சம்பவத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் வேனில் வந்த துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது தந்தையும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதியை அழைத்துச் சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் செல்லும் போது மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய பொலிஸார் நேற்று  செவ்வாய்கிழமை மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் சம்பவம் தொடர்பில் தெரிவித்து காணனொளி காட்சிகளையும் காண்பித்துள்ளனர். பின்னர் நீதிவான் சந்தேக நபர்களை எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய பொலிஸார் நேற்று செவ்வாய்கிழமை மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த யுவதியையும் துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோவையும் கைது செய்துள்ளனர்.

இதன்போது வென்னப்புவ சிரிகம்பல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய துலக்ஷி ஜமோதரி பிரனாந்து எனப்படும் வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினரும் 16 வயதுடைய நிமாஷா நவான்ஞலி பிரனாந்து எனப்படும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்ட யுவதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.