பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை பூசாரிபிரிவின் இரண்டாம் இலக்க தேயிலை மலையின் மனா தோப்புகுதியில் சந்தேகத்து இடமாக மனித எச்சங்கள் சில இனங்கானபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை இனங்கண்ட பொதுக்கள் குறித்த கையடக்க தொலைபேசியினை பொலிஸாருக்கு ஒப்படைத்ததை முன்னிட்டு தொலைபேசியில் உள்ள தகவல்களுக்கு அமைய ஆரம்பிக்கபட்ட விசாரணைகளின் போது இரண்டாம் இலக்க தேயிலை மலையின் மனித எச்சங்களை பொகவந்தலாவ பொலிஸார் இனங்கண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டபகுதியில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ள நபர் எனவும் சந்தேகிக்கபடுவதோடு மனித எச்சங்கள் கிடக்கும் பகுதியில் டிசேட் ஒன்றும் நீட்டகாட்சட்டையும் இனங்கானபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவலைக்கபட்டு விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்
குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

