இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்

329 0
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை நான்கு மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இதில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் 1தொடர்பிலும், ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்;ட கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

அதேபோல் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அந்த கூட்டத்தின் பின்னர் ஐ.தே.கவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேசவுள்ளனர்.

கடந்த வாரத்தில் ஐ.தே.கவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் சஜித்தை சந்திப்பதற்கு உத்தேசித்திருந்த போதிலும் பின்னர் அந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டது.

புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக கடந்தவாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டமும் இணக்கமின்றி நிறைவுப்பெற்றமை குறிப்பிடதக்கது.