அமரர். கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் ஆசிரியர் அவர்களுக்கு அகவணக்கம்.

126 0

யாழ்.சாவகச்சேரியிற் பிறந்தவரும் கொக்குவில் தாவடியிலே வாழந்தவருமான ஆசிரியர் திரு கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் 12.08.2019ஆம் நாளன்று சாவடைந்து இறுதி வணக்கம் தாயகத்திலே அன்னாரது இல்லத்திலே நடைபெற்றுத் தாவடி இந்து மாயானத்தில் அவரது பயணம் நிறைவுற்றபோதும், அவரது தமிழ்ப்பணியால் அவர் எம்மோடு என்றும் இருப்பார்.

பேரக் குழந்தைகளின் பொருட்டு யேர்மனிக்கு வந்தபோதும் ஓரு ஓய்பெற்ற ஆசானாக இருந்த நிலையிலும் முதுமையிலும் சோர்வடையாது ஒரு எடுத்துகாட்டாக விளங்கும் வகையிலே எமது பகுதியிலே இரு தமிழாலயங்களில் ஆசிரியப்பணியோடு எமது கழகத்தின் நிகழ்வுகளோடும் இணைந்திருந்த அன்னாரது குமுகாயப்பணிக்கு மதிப்பளித்து லண்டவையும் அதனைச் சூழவுள்ள நகரத்துத் தமிழ் உறவுகளும், லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகத்தின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற அகவணக்க நிகழ்வில் இணைந்து இன்று மாலை அகவணக்கம் செலுத்தினார்கள்.