போலி ஆவணம் தயாரிப்பு நிலையம் முற்றுகை!

25 0

பொலன்னறுவை பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலன்னறுவை – கொதலாவல வீதியில் – ரஜஎல – ஹிங்குரங்கொட பகுதியில் அமைந்துள்ள போலி ஆவண தயாரிப்பு நிலையமொன்று குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்றையதினம் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாலக வஜிரகாந்த விக்கிரமகே எனப்படும் 51 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் பொலிஸ் சான்றிதழ்கள் , கல்விச் சான்றிதழ்கள் , பரீட்டை பெறுபேற்று சான்றிதழ்கள் , காணி அத்தாட்சி பத்திரங்கள் , சாரதி அனுமதி பத்திரங்கள் , வைத்திய சான்றிதழ்கள் , நீதிமன்ற ஆவணங்கள் , கிராம சேவகரினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் , மரம் மற்றும் பலகை  வியாபாரத்திற்கான அனுமதிப்பத்திரம் , வனவள சார்ந்த அனுமதிப் பத்திரங்கள் மற்றும் அரச , தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 86 இறப்பர் முத்திரைகள் மற்றும் 2 அச்சி இயந்திரங்களும் , கணணியொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.