எறும்புண்ணி இறைச்சியுடன் நபர் ஒருவர் கைது

25 0
வெல்லவாய, வீஸ்சயாய பிரதேசத்தில் எறும்புண்ணி இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊவா குடா ஓய பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் குறித்த எறும்புண்ணியை காட்டுப் பகுதியில் வைத்து கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் எறும்புண்ணியை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து 2,1/2 கிலோ கிராம் எடையுடைய எறும்புண்ணி இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

வீஸ்சயாய பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகி வரும் விலங்கினமாக பெயரிடப்பட்டுள்ள இந்த விலங்கினம் வெல்லவாய பிரதேசத்தில் பெருமளவில் வாழ்கின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடாஓய பொலிஸார் தெரிவித்தனர்.