கற்பாறை விழும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்வு

43 0

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டகலை மேபில்ட் தோட்ட பகுதியில் நான்காம் இலக்க லயன் குடியிருப்பு பகுதியில் உள்ள பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழும் அபாயம் காரணமாக, குறித்த தொடர் லயன் குடியிருப்பில் வசித்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் குறித்த தோட்ட பகுதியில் உள்ள வாசிகசாலை மற்றும் கலாசார மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேரும் நேற்று (12) இரவு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

மலையகத்தில் தொடரும் சீர்ரற்ற காலநிலை காரணமாக, நேற்று குறித்த லயன் குடியிருப்பில் உள்ள பாரிய மண்மேடும் 2 கற்பாறைகளும் சரிந்து விழுந்ததில் குறித்த லயன் குடியிருப்பில் வசித்து வந்த17 வயது சிறுமியும் 54 வயதுடைய பெண்ணும் தொடர்ந்தும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தற்காலிகமாக இடம்பெயர்ந்து உள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை தோட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் வழங்கி வருவதோடு, மண்சரிவு ஏற்பட்ட பகுதியை பரிசிலனை செய்ய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவிக்கபட்டுள்ளதாகவும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அறிக்கை கிடைக்க பெற்ற பிறகு குறித்த குடியிருப்பில் உள்ள மக்களை அங்கு குடியமர்த்துவதா அல்லது மாற்று நடவடிக்கை மேற்கொள்ளபடுவாத தொடர்பில் பின்பு அறிவிக்கபடும் என கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.