அரச வீடுதியில் பாரிய தீ விபத்து

380 0

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் கிழங்கன் பகுதியில் உள்ள அரச வீடுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (08) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள், பொலிஸார், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தீயனைக்கும் படையினரோடு இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வீடுதியில் தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியபடவில்லை.

இதேவேளை, வீடுதியில் சேதமான உபகரணங்களின் பெறுமதியும் இதுவரையில் கண்டறியபடவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.