மஹிந்தவிற்கு பலமாக மக்கள் இருக்கின்றனர்- ரோஹித்த

346 0
எவர் இணைந்தாலும் இணையாவிட்டாலும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பலமாக மக்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மீதும் பொதுஜன பெரமுன மீதும் நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் எதிர்காலத்தை கையளிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவில் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த டி.பீ.ஹெரத், வெற்றிடமாகியுள்ள சாலிந்த திசாநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மற்றுமொரு உறுப்பினரை நியமிக்கும் நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.