சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஒன்றுமே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இத்தீவிபத்தில் பழக்கடை முற்றாக எரிந்துள்ளது. இவ்விபத்தையடுத்து யாழ்மாநகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

