வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

301 0

வவுனியா நைனாமடுவில் நேற்று (06) மாலை  மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாமடு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாமடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸார் நேற்று மாலை நெடுங்கேணி சேமமடுவில் இருந்து வவுனியா பூந்தோட்டம் நோக்கி சட்டவிரோதமான முறையில் பெறுமதிமிக்க 13  முதிரை குற்றிகளை டாட்டா கப் ரக வாகனத்தில் எடுத்துச் செல்கையில் மாமடு பகுதியில் பொலிஸார் வாகனத்தை வழிமறித்த போது வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாக செலுத்தியுள்ளார்.

இதையடுத்து வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் அக்போபுர மாமடு பகுதியில் குறித்த  வாகனம் வீதியோரத்திலுள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சோதனை மேற்கொண்ட போது அனுமதி பத்திரம் இல்லாது சட்டவிரோதமாக கொண்டு சென்றதன் காரணத்தினால் வாகனத்தின் சாரதி மற்றும்  உதவியாளர்கள் இருவரையும் வாகனத்துடன் முதிரைக் குற்றிகளையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக மாமடு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா,சேமமடு, பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 33,25 வயதுடையவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் மாமடு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.