இரத்தினபுரி, பெல்மதுளை பொலிஸ் பிரிவில் உள்ள வர்த்தக நிலையத்திலிருந்து மூன்று கோடி ரூபா வரை பெறுமதி மிக்க மாணிக்கக் கற்கல், பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரத்தினபுரி பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்கவின் கீழ் இடம்பெற்ற விஷேட விசாரணைகளிலேயே இவர்கள் இவ்வாரு இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த சந்தேக நபர்களில் இருவர் ஆசிரியர்கள் எனவும் மற்றுமொருவர் முன்னாள் இராணுவ வீரர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜூலை 28 ஆம் திகதி இந்த மூன்று கோடி ரூபா பெறுமதியான மாணிக்ககல், பணம், நகை திருட்டு சம்பவம் பதிவாகியிருந்தது. இந் நிலையில் பெல்மதுளை பொலிஸாரும் இரத்தினபுரி பொலிஸ் அத்தியட்சரின் கீழான சிறப்பு குழுவும் அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

