யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் இன்று வீசிய கடும்காற்றினால் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுன்னாகம் கந்தரோடை மடத்தடிப் பகுதியில் கடும்காற்றினால், தென்னைமரம் ஒன்று வீடொன்றின்மேல் சாய்ந்து வீழ்ந்ததில், குறித்த வீட்டின் கூரைப்பகுதி பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சுன்னாகம் பிரதேசத்தில் வேறு சில வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கிய எறியப்பட்டுள்ளதுடன், வேலிகளும் சாய்ந்துள்ளன.
நாட்டின் பல பகுதிகளிலும் வீசும் காற்று இன்று கடுமையா வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் காற்றினால் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


