தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தையும் அங்கீகாரத்தையும் பெறும் – தமிழிசை சவுந்தரராஜன்

318 0

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தையும் அங்கீகாரத்தையும் பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டுவரும் முயற்சிகள் வெற்றி பெறும்  என்று கூறினார்.

மேலும் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்  வெற்றிபெற வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும்,  தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தையும் அங்கீகாரத்தையும் பெறும் என்றும்  அவர் கூறினார்.