அமெரிக்காவில் மீண்டும் துணிகரம் – கிளப்பில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

350 0

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளப்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளப்பில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார்.
இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது துப்பாக்கிச்சூடு இதுவாகும்.
ஏற்கனவே, டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.