ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டமைப்பு உடன்படிக்கை ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை காலை 9 மணிக்கு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற இருந்த குறித்த நிகழ்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தலில் களமிறங்குவதற்காக ஐக்கிய தேசிய கட்சி மேலும் சில அரசியல் கட்சிகளுடன் இணைவதற்கு தீர்மானித்துடன் அதற்காக குறித்த கட்சி தலைவர்கள் உட்பட உறுப்பினர்களுடன் நானை உடன்படிக்கை ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவிருந்தனர்.
குறித்த ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திடுவது தொடர்பில் நேற்று (03) கட்சித்தலைவர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது குறித்த ஒப்பந்தத்திற்கு கை்சசாத்திடுவதை தற்காலிகமாக ஒத்தி வைக்க தீர்மானித்ததாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

