விபத்தில் பெண் ஒருவர் பலி

275 0

மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேலியகொட – புத்தளம் வீதியின் முதுகட்டுவ பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடஹேன, சங்சமித்தா மாவத்தையைச் சேர்ந்த சேர்ந்த நடராஜா சசிகலா (வயது 44) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற நேற்று (03) பேலியகொட பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியொன்று, முன்னால் வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, முச்சக்கர வண்டியின் பின்னால் இருந்து பயணித்த குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ௯றினர்.

விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.