இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையானது தமது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட வழமையான அறிவுத்தல்தான் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ்
இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்ததுடன், இதன் காரணமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியிருந்தது.

எனினும் இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை தமக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் குறித்த செய்தி தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு மத்தியிலேயே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

