
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சுகாதார துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த க.தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நெஞ்சு வலிக்கிறது என கூறி மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றியவர் என தெரிய வந்துள்ளது

