யாழில் ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

447 0

யாழ் மாதகல் துறை பகுதியில் நேற்று (31)பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து  மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது  122.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவைக் மீட்டுள்ளனர்.இளவாலை பொலிஸார் மற்றும் கடற்படை வீரர்கள் மாதகல் துறை பகுதியில் தேடுதல் மேற்கொண்டத்தில், கடற்கரைக்கு அருகில் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல பொதிகள் கண்டு பிடிக்கப்பட்டன. இதன்போது குறித்த பொதிகளில் 122.5 கிலோ கேரள கஞ்சா காணப்பட்டது.

கேரள கஞ்சா தொகை கடல் வழி வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா தொகை குறித்து இளவலை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.