குருகுலபிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில் இன்று(காணொளி)

404 0

appuji-100-years-ceremonyகுருகுல பிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.குருகுல பிதா என எல்லோராலும் அழைக்கப்படும் அப்புஐPயின் நூறாவது ஜனனதின நிகழ்வும், உருவச்சிலை திறப்பும் கிளிநொச்சியில் இன்று உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி இந்துக்கல்லூரி மண்டபத்தில் “நினைவழியாப் பெருமனிதன்” என்னும் நூல் வெளியீட்டுவிழாவும் நடைபெற்றது.

இவ் விழாவில், தவத்திரு மகாதேவ சுவாமிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் திரு சிவபூமி தலைவர் ஆறுதிருமுகன் மாகாண சபை உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பசுபதிப்பிள்ளை மகாதேவ சைவச்சிறுவர் இல்லத்தலைவர் இராசநாயகம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் றுபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் வலயக்கல்விப்பணிப்பாளர் க. முருகவேல் ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிரதி அதிபர் திரு ச.லலீசன், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வியலாளர்கள் பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.