தெரிவுக்குழுவில் கட்டாயம் சாட்சியளிப்பேன் – சாகல

282 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு தனக்கு கூறப்பட்டுள்ளதாகவும் கட்டாயம் தான் தன்னுடைய சாட்சியினை பதிவுச்செய்வதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிராம மக்களின் நாளாந்த தேவைகளை வினைத்திறனான முறையில் பூர்த்திச் செய்யும் பொருட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களின் கீழ் வெலிகம ஆசனத்தில் வரக்கப்பிட்டிய மற்றும் மீருப்ப பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய “சேவாபியசவினை” அமைச்சர் மக்கள் பாவனைக்கு கையளித்தார்.

இந்நிகழ்வில் கருத்துரைத்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

நான் வாராந்தம் திங்கட் கிழமைகளில் நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற அறிக்கையினை ஆராய்ந்து பிரதம அமைச்சரிடம் அறிக்கையொன்றினை கையளிப்பேன். வெலிகம ஆசனத்தில், வெலிபிட்ட பிரதேசசெயலக பிரிவின் முன்னேற்ற அறிக்கையினை பார்த்த பொழுது அதன் முன்னேற்ற வேகம் குறைவாக இருந்தது. விசேடமாக வீதி அபிவிருத்தி பணிகள் தாமதித்திருந்தன. என்னுடைய அமைச்சினாலோ அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சினாலோ அல்லது கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் 02 மில்லியன்கள் அளவிலான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வபிவிருத்தி பணிகளின் தாமதத்திற்கான காரணம் என்ன என ஆராய்ந்த பொழுது இவ்வபிவிருத்தி பணிகள் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்றமையே இத்தாமதத்திற்கு காரணமென தெரிவிக்கப்பட்டது.

இது மக்களின் பணம் என்பதால் இப்பணிகளை துரிதகதியில் முன்னெடுக்குமாறு நான் பிரதேச சபை தலைவரிடம் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். இப்பணமானது என்னுடையதோ, பிரதம அமைச்சரதோ அல்லது ஜனாதிபதியினதோ நிதியல்ல. நாம் கிராமங்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான நிதியை மாத்திரமே ஒதுக்குகின்றோம். மக்களிற்கான அபிவிருத்தி திட்டங்களில் அரசியல்
பாகுப்பாடுகளை கலைந்து முன்னெடுக்க வேண்டுமென நான் பிரதேச சபை தலைவரிடம்
கேட்டுக்கொள்கின்றேன்.

மக்களின் தேவைகளை பூர்திச்செய்து கொடுக்கங்கள். யார் பணம் கொடுத்தாலும் அதற்கு கட்சி நிறத்தை பூசாதீர்கள். இத்திட்டங்களின் மூலம் உங்கள் கிராமமும், மக்களுமே நன்மையடைவார்கள்.
அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டு இத்திட்டங்களை நிறுத்த வேண்டாமென நான் பிரதேச சபை தலைவரிடம் கேட்டுக்கொள்கின்றேன். மக்களிற்கு பணியாற்றும் பொருட்டு நீங்களும் மக்களிடமிருந்து வாக்குகளை பெற்றே இங்கே வந்துள்ளீர்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவுக்கூற விரும்புகின்றேன். நாங்கள் மிக வேகமான அபிவிருத்தி பயணமொன்றினை மேற்கொண்டிருந்தோம் ஏப்பிரல் மாதம் 21ம் நாள் ஏற்பட்ட துரிதிஷ்டவசமான சம்பவத்தினால் நான் பின்னடைவினை சந்தித்த போதிலும் தற்பொழுது நம்பிக்கையுடன் முன்னேறுகின்றோம். நாம் முன்னோக்கிச் செல்லும் பொழுது எம் பிரச்சினைகளிற்கான தீர்வுகள் எட்டப்படும்.

அடுத்த வாரம் 06ம் நாள் என்னையும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வமற்ற தகவலொன்று என் காதுகளை எட்டியுள்ளது. நான் கட்டாயம் இத்தெரிவுக்குழுவில் என் சாட்சியை பதிவுச்செய்து முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன். அரசாங்கத்தின் செயற்பாடுகளிற்கு இடையூறு விளைவிக்காத, விசேடமாக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாத எந்தவொரு பிரச்சினைக்கும் நான் தீர்வினை வழங்குவேன். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இப்பாதுகாப்பு விடயங்களிற்கு பொறுப்பான அமைச்சராக நானும் சிறிதுகாலம் கடமையாற்றியுள்ளமையினால் இத்தெரிவுக்குழுவில் சாட்சியமளித்து என்னுடைய முழுமையன ஒத்துழைப்பினை வழங்குவேன். உத்தியோக்ப்பூர்வ அழைப்பு கிடைக்கும் வரையில் காத்திருக்கின்றேன் அழைப்பு கிடைத்தவுடன் நிச்சயமாக நான் இத்தெரிவு குழுவின் முன்னர் சாட்சியமளித்து இவ்விசாரனைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவவேன். அச்சங்கொள்ள வேண்டாம் உங்கள் அனைவரதும் சிறந்த எதிர்காலத்தின் பொருட்டு நாம் கடினமாக உழைக்கின்றோம். சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது அவற்றை தீர்த்து நாம் முன்னோக்கிச் செல்வோம். விசேடமாக அபிவிருத்தியில் அரசியல் பாகுப்பாடுகள் இல்லை.

தேர்தலில் எம்முடைய பிரதிநிதி யார் என்பது தொடர்பில் கதைப்பதற்கு இன்னும் சிறிது காலம் உள்ளது. பிரதிநிதியை பெயரிடுவதற்கு ஒவ்வொரு கட்சியும் தனக்கான செயன்முறையினை பின்பற்றுகின்றது. அச்செயன் முறைகளிற்கமைவாக உகந்த காலத்தில் குறித்த கட்சிகள் தங்களின் பிரதிநிதிகளை அறிவிக்கும். பெருந்தொகையான நிதி இப்பிரதேசங்களிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இறுதி தருணம் வரையில் நாம் வேலை செய்ய வேண்டும். நாட்டிலுள்ள ஏனைய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். எம்மால் இயன்றளவு பணியாற்ற வேண்டும் அப்பொழுது தான் அடுத்து வரும் தலைவரால் இவ்வபிவிருத்தி பணிகளை தொடரக்கூடிய நிலையை நாம் உருவாக்க வேண்டும். அப்பொழுது அடுத்த தலைவரால் அவருக்கான காலப்பகுதியில் எவ்வித தாமதங்களுமின்றி இவ்வபிவிருத்தி பணிகளை தொடர இயலும். தேர்தலுக்கு தயாராகுகின்றோமென கூறி எமக்கு நாமே குழிகளை வெட்டக் கூடாது.

தேர்தலுக்கு இன்னும் சிறிது காலம் உள்ளமையினால் நாம் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்றுவோமென நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.