பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில்……

230 0

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த அடையாள வேலை நிறுத்தத்திற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களும் பங்கேற்றதாக, பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டு ஒன்றியத்தின் இணைத் தலைவர் தம்மிக எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் தம்மிக எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.