கொலை குற்றவாளி ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை

42 0

கொஸ்கம, கஹட்டபிட்டிய பகுதியில் நபர் ஒருவர் இனந்தெரியாத சிலரினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த குறித்த நபர் 10 மாதங்களுக்கு முன்னர் தாய் மற்றும் மகளை கொலை செய்யத குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபனமாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலையான ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொஸ்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் ஒன்றை வழங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கஹட்டபிட்டிய சந்தியில் வைத்து நால்வரினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கொஸ்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.