மருந்துகளின் விலைக் குறைப்பினால் 4,400 மில்லியன் ரூபாய் சேமிப்பு – ராஜித

287 0

முதற்கட்டமாக 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலைக் குறைப்பை மேற்கொண்டதன் மூலம் 4,400 மில்லியன் ரூபாயால் மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, 3,600 ரூபாயாக இருந்த மருந்து ஊசியின் விலை ரூ.400 ஆல் குறைவடைந்துள்ளதாக’வும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறைகளில் மருந்து வகைகளின் விலைகளில் கொள்வனவு செய்வதில் பாரிய நிவாரணம் பொதுமக்களுக்குக் கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதனால் இறக்குமதிச் செலவினை 9,200 மில்லியன் ரூபாயாக குறைக்க முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் பொதுமக்களுக்கு வருடாந்தம் 4,400 மில்லியன் ரூபாய் பெறுமதியான பயன்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், வைத்தியசாலைகளில் நிலவிய மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டினை 2015ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக குறைக்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, வைத்தியசாலைகள் மத்தியில் மருந்து வகைகளைப் பரிமாறுவதற்காக வகுக்கப்பட்டிருந்த நடைமுறை கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ராஜித, இருப்பினும் இந்நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.