யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ள பகுதியில் இன்று மதியம்  தீ  விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பற்றைக்காடுகளாக காணப்பட்ட பிரதேசத்திலேயே தீ பரவத்தொடங்கியிருந்தது. எனினும் கடும் காற்று மற்றும் வெயில் காரணமாக தீ வேகமாக பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா நகரசபையின் தீ அணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கடும் பிரயத்தனத்திற்கு பின்னர் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வவுனியா வளாகத்தின் கட்டிடத்தொகுதிக்கு தீ பரவாது தடுக்கப்பட்டுள்ளமையினால் பாரிய சேதங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.