கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பீடம், உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது

ஆண்கள் விடுதியில் ஏற்பட்ட சம்பவத்தை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுதேச மருத்துவ பீடத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, திட்டமிடப்பட்டிருந்த அனைத்துப் பரீட்சைகளும் மீள் அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும், (27) சனிக்கிழமை அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பீடத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

