கொஹுவலை துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

267 0

கொழும்பு, கொஹுவலை ஜம்புகஸ்முல்லா மாவத்தையில் ஜீப் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று அதிகாலை 1:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான இருவரும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியாலையில் (களுபோவில) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போதே மேற்படி ஜீப் வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உதயஹாமுல்ல பகுதியைச் சேர்ந்த சுசில் ருவான் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த தலபத்பிட்டியவைச் சேர்ந்த 40 வயதுடைய இந்திக்க ரோஷான் என்பவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.