எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஸ் இதனை தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், மாகாண சபையில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அதிகாரங்கள் இல்லை.
எனவே எமது கட்சி சார்பாக போட்டியிடுபவர்கள் மாகாண சபைக்கு உள்ளளே சென்று, மாகாண சபையினூடாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதென்பதை எடுத்துக்காட்டவுள்ளோம். அதற்காகவே தேர்தலில் களமிறங்க தீர்மானித்தோம்.
வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுடன் இணைந்து நாம் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியடைவோமென்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
எனினும் தமது கட்சியின் கொள்கையுடன் இணைந்து பயணிக்கக்கூடியவர்களுடனேயே தேர்தல் கூட்டணி அமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

