வரட்சியினால் 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

304 0

இலங்கையில் வரட்சியினால் 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருக்கிறது.பல மாவட்டங்களைச் சேர்ந்த 173,000 இற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 615,984 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வட மாகாணம், வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.