மட்டக்களப்பில் மழை வேண்டி வழிபாடுகள் (படங்கள்)

599 0

b1மட்டக்களப்பு ஈரளக்குழத்தில் மழை வேண்டி, கொம்பு முறி விளையாட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டில் வறட்சி காரணமாக மழை பெய்ய வேண்டும், நாடு செழிக்க வேண்டும், துன்பங்கள் ஒழிய வேண்டும் என்பதற்காக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.

மட்டக்களப்பில் உள்ள கூத்துக்கலைகள் பொதுவாக கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றன.

கொம்புமுறி விளையாட்டு கண்ணகி அம்மனை முன்னிறுத்தி வழிபாடு செய்யப்படுகின்றது. அம்மை, கொப்பளிப்பான், கண்நோய் போன்ற நோய்களை ‘அம்மன் கோதாரி’என்று அழைப்பது மட்டக்களப்பு பிரதேச வழக்கு.

மழை வளங்குன்றி, வறட்சி அதிகமான காலத்திலேயே இந்த நோய்கள் அதிகம் பரவுவதனாலும் மஞ்சலும், வேப்பிலையாலும் கண்ணகி அம்மனுக்கு விழா நடத்தினால் கண்ணகை மகிழ்சியுற்றால் மழை பொழியுமெனவும் நோய்கள் குறையும் எனவும் மட்டக்களப்பு மக்கள் நம்புகின்றனர்.

இதனாலேயே கண்ணகியை வேண்டி மழைக் காவியம் பாடி இந்த வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் எதிர்கால சந்ததியினருக்கு தமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை தெரியப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாண்டிய மன்னனோடு வழக்குரைத்த கண்ணகியின் பொங்கிய சினத்தை தணிப்பதற்காக இளைஞர்கள் கண்ணகி, கோவலன் கட்சி என இரண்டு பிரிவாகப் பிரிந்து கொம்பு எனப்படும் வளைந்த தடிகள் இரண்டை ஒன்றோடு ஒன்று கொழுவி இழுத்து முறித்து விளையாடி கண்ணகி கட்சிக்கு வெற்றி கொடுத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இந்த வினோத விளையாட்டைக் கண்ணுற்ற கண்ணகி கோபம் தணிந்து மனம் மகிழ்வுற்று சிரித்ததாகவும் கண்ணகியை மகிழ்சி அடைய செய்யும் நோக்கிலே தோன்றி இந்த கொம்புமுறி விளையாட்டு வளர்ச்சி அடைந்தது.

இது விளையாட்டு என்று பேர் பெற்றிருப்பினும் சமய சம்பந்தமானதும் இலக்கிய ரசனைக்குரியதாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

b2 batti