களுத்துறை வடக்கு, நாகஸ்ஹந்திய புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பெலியத்தவுக்கு பயணித்த ரயில் ஒன்றில் முச்சக்கர வண்டி மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் முச்சக்கர வண்டியில் பின்புறத்தில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு வெலிகொட பகுதியில் வசித்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

