இரு நீதிமன்றங்களில் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் கைது

300 0

பதுளையின் இரு நீதிமன்றங்களில் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் வீடொன்றில் மறைந்திருந்த வேளையில் கந்தகெட்டிய பொலிசாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

 

பதுளை மீகாகியுலப் பகுதியின் கலுகாகந்துர என்ற இடத்தில் வீடொன்றில் மறைந்திருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கந்தகெட்டிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சுற்றி வலைப்பினை மேற்கொண்டிருந்தனர். பதுளை நீதவான் நீதிமன்றம் மற்றும் பதுளை மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் குறித்த நபருக்கெதிராக பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளன. கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த  வழக்குகளுக்கு இவர் ஆஜராகாமையினால் அவருக்கு பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.