லசித் மலிங்கவின் பிரியாவிடை போட்டி ஆரம்பம்

358 0

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமானது. 

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இன்றைய போட்டியுடன் இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.