கர்ப்பிணி படுகொலை; கணவன் கைது

331 0

எட்டு மாத கர்ப்பிணியைப் படுகொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டில், அப்பெண்ணின் கணவரை,  பதுளை பொலிஸார் இன்று (26) காலை கைதுசெய்துள்ளனர்.

பதுளையி பிரதேசத்திலுள்ள வீடொன்றில்,  நேற்று (25) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஸ்ரீகாந்த் பிரியா (வயது 24) என்ற பெண்ணே படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

அலைபேசி சாஜர் வயரினால், மேற்படி பெண்ணின் கழுத்தை நெறித்து, குறித்த நபர் படுகொலைச் செய்துள்ளார் என்று, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குடும்பத்தகராரே இச்சம்பவத்துக்குக் காரணம் என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.