லக்ஷ்மன் கதிர்காமர் கொலை : விடுதலை புலி உறுப்பினருக்கு எதிராக ஜேர்மன் குற்றச்சாட்டு

264 0

வெளியுறவுத்துறை அமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினருக்கு எதிராக ஜேர்மன் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்ட 40 வயதான ஜி. நவனிதன் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர் 2002 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுத் துறையில் கடைமையாற்றியுள்ளதுடன், லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கான தவல்களை வழங்கியதாக தெரிவித்தே ஜேர்மனி அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை பதிவுசெய்துள்ளது.