இராணுவ ட்ரக் வாகனம் விபத்து : 11 சிப்பாய்கள் படுகாயம்

342 0

அம்பாந்தொட்டை – சூரியவௌ பகுதியில் இராணுவத்தின் ட்ரக் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில்  11 இராணுவத்தினர் காயமடைந்து சூரியவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூரியவௌ – ரன்முத்துவௌ கமனல சேவைகள் மத்திய நிலையத்திற்கருகில் இன்று புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் அநுராதபுரம் – சாலியபுர இராணுவ முகாமிற்கு சொந்தமான ட்ரக் ஒள்று சாரதியின் கட்டுபாட்டையிழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது ட்ரக் வாகனத்தில் சாரதி உட்பட 14 இராணுவத்தினர் பயணித்துள்ள நிலையில்  11 இராணுவத்தினர் காயமடைந்து  சூரியவௌ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான லேதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.