புத்தளம், வணாத்துவில்லு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வணாத்துவில் – லெக்டோ தோட்டத்திற்கு அருகிலேயே இன்று அதிகாலை குறித்த 6 பேரும்கைது செய்யப்பட்டதாக வணாத்துவில்லு பொலிசார் குறிப்பிட்டனர்.
கடந்த 16 ஆம் திகதியும் இப்பகுதியில் வெடிமருந்துகளுடன் 3 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

