துப்பாக்கியுடன் ஒருவர் கைது

49 0

சூரியவெவ ஹம்பெகமுவ பிரதேசத்தில் துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காவற்துறை அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து துப்பாக்கியுடன்  சில ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் வனவிலங்கு காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்க்கது.