முன்சன் தமிழாலயத்தின் வெள்ளி விழா 20.7.0219 – யேர்மனி

1283 0

தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தின் வெள்ளி விழா 20.07.2019 அன்று 10.30 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என அணி திரள சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இவ் விழாவிற்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் மற்றும் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் மற்றும் முன்னாள் மாநிலச் செயற்பாட்டாளர் திரு. ஆறுமுகம் விவேகானந்தன் ஆகியோர்களுடன் சிறப்பாக வருகை தந்த ஏனைய செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மங்கலவிளக்கேற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இவ் விழாவில் மாணவர்கள் மதிப்பளிப்பு, ஆசிரியர்கள் மதிப்பளிப்பு, சிறப்பு மலர் வெளியீடு மற்றும் கலை நிகழ்ச்சிகள், சிறப்புரையாற்றல்கள், வாழ்த்துக்கள் என உள்ளடங்கி இந் நிகழ்வானது 21.00 மணியளவில் சிறப்பாக நிறைவுபெற்றுள்ளது. எமது தமிழாலய வெள்ளி விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொண்டு அடுத்த வளர்ச்சிக்குத் தமிழாலயம் தன்னைத் தயார்படுத்த இவ்விழா பெரிதும் உதவியுள்ளது எனப் பெருமிதம் கொள்கின்றது முன்சன் தமிழாலயம்.