ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. யானைச் சின்னத்தில்…….

294 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்த வேட்பாளர் களமிறங்கினாலும் அவர் யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 25 வருடங்களாக ஜனாதிபதி ஒருவரை பெற்றுக் கொள்ளவில்லையெனவும் இதனால், கட்சியும், ஆதரவாளர்களும் அனாதரவாக காணப்படுவதாகவும் அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள முடியுமான தலைவர் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி களத்தில் இறக்கும் எனவும் இதற்காக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள பாரிய கூட்டணியொன்றை அமைப்பதாகவும் தேர்தலில் வெற்றி கொண்டு நாட்டை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.