நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக தனிநபர் பிரேரணை-அமரவீர

270 0

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெறற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்பொதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நாட்டில் இருக்கும் வரையில், ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டாலும்கூட, அவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது.

எனவே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும், அது நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற எவருமே அதனை ஒழிக்கவில்லை. இந்தப் பதவி ஒழிக்கப்படாததன் விளைவாகவே நாட்டில் இப்போது, இரண்டு தலைவர்கள் இருக்கிறார்கள்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கப் போவதாக தெரிவித்த ஜே.வி.பி இப்போது அமைதியாக உள்ளது.

உண்மையிலேயே ஜே.வி.பி ஆர்வமாக இருந்திருந்தால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரரேரணையை நிறைவேற்றியிருக்கலாம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்க நான் நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளேன்” என்றும் அவர் கூறினார்.