அரசியல் சுய தேவைகளுக்காக  அரசியலமைப்பிற்கு  அப்பாற்பட்டு  செயற்படுவது முரணானதாகும் -ரஹ்மான்

218 0

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ள  ஏற்பாடுகளை  ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியினர் முதலில் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும். அரசியல் சுய தேவைகளுக்காக  அரசியலமைப்பிற்கு  அப்பாற்பட்டு  செயற்படுவது முரணானதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹ்மான் தெரவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவி காலம்   எத்தனை வருடங்கள்  என்ற  சந்தேகம்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினருக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது.  ஆறு  வருடகாலமாக   ஜனாதிபதியின் பதவி  காலம்  19ஆவது திருத்தத்தின் ஊடாக ஐந்து வருடமாக குறைக்கப்பட்டமையினை  சுதந்திர கட்சியினர் நன்கு அறிவார்கள்.  அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது  அதில் எவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது அறியாமல் எவரும் ஆதரவு  வழங்கவில்லை.

எந்நிலையிலும்  ஜனாதிபதியின் பதவி காலத்தை ஐந்து வருடத்திற்கு மேல் நீடித்துக் கொள்ள முடியாது.   பதவியில் மேலதிகமாக  இன்னும்   குறுகிய   காலம்  இருக்கலாம் என்ற  நோக்கத்திலே பதவி காலம் தொடர்பில் தொடர்ந்து சந்தேகம் எழுப்படுகின்றது.  அரசியல் தேவைகளுக்காக அரசியலமைப்பினை தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியாது.