தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் : அருட்தந்தை சக்திவேல்

332 0

நுவரெலியா கந்தப்பளை சர்ச்சை, நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், கன்னியா வெந்நீரூற்று விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் பௌத்த பேரினவாதமே தலைதூக்கியுள்ளது. மலையகம், வடக்கு, கிழக்கு என்று அனைத்துப் பகுதிகளிலும் தாம் வேரூன்ற வேண்டும் என்றே பேரினவாதிகள் கருதுகிறார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் விடுக்கொடுப்புடன், ஒரு மனம் திறந்த பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து செயற்படாவிடின், இந்த பேரினவாத சக்திகளை எதிர்க்க முடியாது என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

இனப்பிரச்சினை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கின்றன. இன, மதத்தை முன்னிறுத்தி செயற்பட்டவர்களாலேயே அப்போது இனப்பிரச்சினைக்கு தூபமிடப்பட்டது.

தற்போது மீண்டும் அத்தகைய இனவாத செயற்பாடுகள் சிலரால் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.