லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினுக்கு மிக உயரிய கவுரவமாக கருதப்படும் விருதினை ஐசிசி வழங்கியுள்ளது.
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அணியின் கேப்டனாக இருந்தவரும் ஆவார். கிரிக்கெட்டில் எல்லா காலங்களிலும் விளையாடிய வீரர்களில், சச்சின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக கருதப்படுகிறார்.
இதனால் இவர் இன்றளவும் கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படுகிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முதலாக 200 ரன்கள் எடுத்தவர் சச்சினே.

இன்றளவும் இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளங்கள் ஏராளம். எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சின்தான் எங்கள் கிரிக்கெட் ஜாம்பவான் என கூறும் அளவிற்கு தீவிர ரசிகர்களும் இவருக்கு உண்டு.
இந்நிலையில் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிக உயரிய விருதான ‘Hall Of Fame’ எனும் விருதினை வழங்கி ஐ.சி.சி. கவுரவித்துள்ளது.

